» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எம்பவர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் பிரச்சாரம்

புதன் 25, மார்ச் 2020 11:10:09 AM (IST)தூத்துக்குடியில் எம்பவர் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் பிரச்சாரம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தூத்துக்குடியில் எம்பவர் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் பிரச்சாரம் நடைபெற்றது.இதை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கும், ஆட்டோக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு எம்பவர் அமைப்பு செயல் இயக்குனர் சங்கர் தலைமை வகித்தார். ஸ்டிக்கர் பிரச்சாரத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னர் துவக்கி வைத்தார். தூய்மை கைகளை வைரஸ்கள் அண்டாது. 

கைகளை கழுவுவோம் வைரஸ்களை விரட்டுவோம். அடிக்கடி உங்கள் கைகளை கழுவுங்கள். கூட்டங்களை தவிருங்கள். கிருமி நாசினியால் கைகளை கழுவுங்கள்,கை குலுக்காதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள். ஆகிய விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய ஸ்டிக்கர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்கூர்தி ஆய்வாளர் உலகநாதன், ஜெபராஜ், எம்பவர் பணியாளர்கள் தீபக், ஏஞ்சல் ஸ்டெல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

K.ganeshanMar 25, 2020 - 03:51:41 PM | Posted IP 108.1*****

Good சேவை Congratulations.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory