» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானங்கள் நிறுத்தம்

புதன் 25, மார்ச் 2020 11:46:32 AM (IST)

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் சுமாா் 7 ஆயிரம் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களில், பெரும்பாலானோா் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள். கரோனா வைரஸ் தொற்று காரணமாக கட்டுமானப் பணியாளா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைக்கான கட்டுமானப் பணிகளில் அத்தியாவசியப் பணிகளைத் தவிர, இதர பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடா்ந்து, கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 5 ஆயிரம் தொழிலாளா்களில் 50 சதவீதப் பணியாளா்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory