» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊரடங்கு உத்தரவுக்கு நடுவே பாய்ந்து வந்த காரை தடுத்து நிறுத்திய ஆட்சியர்: தூத்துக்குடியில் பரபரப்பு!!

புதன் 25, மார்ச் 2020 12:29:22 PM (IST)தூத்துக்குடியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சாலையில் பாய்ந்து வந்த காரை ஆட்சியர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஊரடங்கு காரணமாக பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. எனினும், அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் சுற்றி அலட்சியம் காட்டி வருவதையும் பார்க்க முடிகிறது. ஆனால், விதிகளை மீறி சாலையில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த காருக்கு எதிராக  வந்த காரை நிறுத்துமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இதையடுத்து காரிலிருந்து இறங்கி ஓடிவந்தவர்களிடம் விளக்கம் கேட்டார். அவசர வேலையில் செல்வதாக சொல்லி சமாளித்தனர் இதனையடுத்து அவர்களை ஆட்சியர் கண்டித்து அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தூத்துக்குடியில் மக்கள் கூட்டம் அதிகமானதால் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இனிமேல் காரணம் இல்லாமல் வெளியில் செல்வோர் நிச்சயமாக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கபடுவார்கள் என்று தெரிகிறது.
மக்கள் கருத்து

துரை பாண்டியன்Mar 26, 2020 - 12:11:19 AM | Posted IP 172.6*****

தூத்துக்குடி துறைமுகதில் வேலை செய்வோரின் நிலைமை என்ன....... அங்கு வேலை பார்க்கும் மனிதருக்கு இந்த வைரஸ் தாக்காத.. ..

தூத்துகுடியன்Mar 25, 2020 - 06:40:00 PM | Posted IP 162.1*****

எல்லாம் சரி சார்.....இன்று மீன், நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள் பல செயல்பட்டதே அதன் மீதும் நடவடிக்கை எடுங்கள் ..பணியாளர்கள் அதிகமாக ஒரே இடத்தில நின்று வேலைசெய்வார்கள் அங்கே .....நோய் தோற்று அதிகம் ஏற்பட வாய்ப்புஉள்ளது ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory