» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முகமூடி சோப்பு ஆயில், கிளினர் விற்பனை அங்காடி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்

புதன் 25, மார்ச் 2020 12:55:52 PM (IST)தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய அம்மா மருந்தகம் அருகில் உள்ள மகளிர் திட்ட வணிக வளாகத்தில் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  திறந்து வைத்தார்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய அம்மா மருந்தகம் அருகில் உள்ள மகளிர் திட்ட வணிக வளாகத்தில் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா இன்று (25.03.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு அங்காடியை திறந்து வைத்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடிமாவட்டத்தில் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மகளிர் சுய உதவிக்குழு மூலம்முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 

2 லீப் மாஸ்க் ரூ.8க்கும், 3 லீப் மாஸ்க் ரூ.10க்கும், கிருமி நாசினி (லைசால்) ½ லிட்டர் ரூ.50க்கும், கிருமி நாசினி (லைசால்) 1 லிட்டர் ரூ.100க்கும், சோப்பு திரவம் ½ லிட்டர் ரூ.40க்கும், சோப்பு திரவம் 1 லிட்டர் ரூ.80க்கும், கை கழுவும் திரவம் ½ லிட்டர் ரூ.250க்கும், கை கழுவும் திரவம் 1 லிட்டர் ரூ.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1.மதி அங்காடி, ஆதிநாதபுரம், திருவைகுண்டம் மெயின் ரோடு, ஆழ்வார்திருநகரி,2.மதி அங்காடி, எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில், ஓட்டப்பிடாரம்,3.மதி அங்காடி, காமராஜ்நகர், போலையார்புரம் விலக்கு, சாத்தான்குளம்,4.ஆ.ஆ. டெய்லர், காந்திநகர், படுக்கப்பத்து, சாத்தான்குளம்,5.ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, விளாத்திகுளம்,6.மகேஸ்வரி பேன்ஸி ஸ்டோர், புதூர் பேருந்து நிலையம் அருகில், புதூர்,7.ஊராட்சி ஒன்றிய அலுவலக வணிக வளாகம், திருவைகுண்டம்,8.மகேஸ்வரி மதி அங்காடி, ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில், கோவில்பட்டி,9. எஸ்ஏ ஜெராக்ஸ் கடை, 236, மதுரை மெயின் ரோடு, டி.எம்.பி. பேங்க் அருகில்,   கயத்தார்,10.மதி அங்காடி, காவல் நிலையம் அருகில், செய்துங்கநல்லூர்,11.வணிக வளாகம், பேருந்து நிலையம் அருகில், திருச்செந்தூர்,12.மதி அங்காடி, கூட்டாம்புளி மெயின் ரோடு, ஜெயம் காய்கறி கடை அருகில், தூத்துக்குடி,13.வணிக வளாகம், பேருந்து நிலையம் அருகில், உடன்குடி,14.வணிக வளாகம், புதிய பேருந்து நிலைய அம்மா மருந்தகம்அருகில், தூத்துக்குடி ஆகிய 14 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

பொதுமக்கள் அரசு மேற்கொண்டுவரும் கொரானோ நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அத்யாவசிய தேவை தவிர்த்து வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதைத்தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மொத்த காய்கறி மார்கெட்டினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, உதவி திட்ட அலுவலர் ரேவதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Mar 25, 2020 - 03:47:29 PM | Posted IP 162.1*****

Our district administration is very dynamic and doing the best for our people. Let us all cooperative with the district அட்மினிஸ்டரேஷன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory