» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடையநல்லூரில் 144 தடை உத்தரவை மீறிய 7 பேர் கைது

புதன் 25, மார்ச் 2020 5:49:20 PM (IST)

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 144 தடை உத்தரவை மீறியதாக 7 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 144 தடை உத்தரவை மீறி சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து சாலையில் சென்ற வண்ணமிருந்தனர். இதுகுறித்து போலீசார் அறிவுரை கூறியும் அவர்கள் கேட்க மறுத்த மறுத்துவிட்டனர் . இதனால் 144 தடை உத்தரவை மீறியதாக கடையநல்லூர் வானுவர் தெருவைச் சேர்ந்த காஜா முகைதீன் மகன் சைபுல்லா (60), அரியநாயகிபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருணாசலம் மகன் பிச்சாண்டி (57),கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல்கனி மகன் முகைதீன் (57),கடையநல்லூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் குருசாமி (37),திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நூர் முகமது மகன் அசன் (59),கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் வினோத் (28),இடைகால் படையாச்சி தெருவைச் சேர்ந்த இளங்கோ மகன் கனகசபாபதி (22)ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory