» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனா சுரண்டை ஸ்தம்பித்தது : மக்கள் ஒத்துழைப்பு

புதன் 25, மார்ச் 2020 8:09:14 PM (IST)

ரோனாவால் முழு ஊரடங்கு நடைபெறும் நி்லையில் சுரண்டை ஸ்தம்பித்தது. மேலும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு இருந்தது.

கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு நேற்று முதல் 21 நாட்கள் 144 தடையுத்தரவு கடைபிடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் வளரும் நகரமான சுரண்டையில் காலை முதலே வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மளிகை கடை, காய்கறி கடை, மெடிக்கல், பால், இறைச்சி கடைகள் திறந்திருந்தன, அதிலும் கூட்டம் இல்லை,  தவிர்க்க முடியாத காரணங்களால் வெகு சிலர் மட்டுமே பைக் மற்றும் சைக்கிள்களில் சென்றனர். ஆஸ்பத்திரிகளில் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசர சிகிச்சை கொடுக்கப்பட்டது. பெருவாரியான இடங்களில் தண்ணீர் மற்றும் சோப்புகள் வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக கடைகள் அடைப்பு என்பதால் நேற்று முன்தினம் காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது, பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி கிடந்தனர். அரசின் உத்தரவை பெரும்பாலும் கடைப்பிடித்தனர். மொத்தத்தில் இயல்பு பாதிக்கப்படவில்லை. ஊரடங்கை முன்னிட்டு வீகேபுதூர் தாசில்தார் ஹரிகரன், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேவையில்லாமல் நடமாடியவர்களை எச்சரித்து அனுப்பினர். டவுன் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் இன்னும் கூடுதலாக ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory