» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் ஆட்சியா் ஆய்வு

வியாழன் 26, மார்ச் 2020 9:12:43 AM (IST)தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ந்நிலையில், வழக்கம்போல் காய்கனி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்க அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் காய்கனி வாங்க வந்தோரை வரிசையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். 

இருப்பினும் கூட்டம் குறையாததால் காய்கனி வாங்க வந்தோரை போலீசார் வெளியேற்றியதாகவும், அப்போது, சந்தையில் உள்ள கடைகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மார்க்கெட் மூடப்பட்டது. இதற்கிடையே, வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிக விலைக்கு காய்கனிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், விலையை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி காமராஜா் காய்கறி மார்க்கெட்டில்  நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக அயல் நிறுத்தம் ஒன்றே தீா்வு என்பதால், அதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.


மக்கள் கருத்து

SudalaiMar 28, 2020 - 08:17:39 PM | Posted IP 173.2*****

Sudalai

SudalaiMar 28, 2020 - 08:17:39 PM | Posted IP 108.1*****

Sudalai

ந. ஜெயவேல்Mar 28, 2020 - 01:27:41 PM | Posted IP 162.1*****

காய்கறி ஒரு அத்தியாவசியமானதாகும். இதனை கூட்டம் சேராமல் மக்களிடம் கொண்டு செல்ல ஒரு வழி உள்ளது. தூத்துக்குடி நகரில் உள்ள சிறிய லாரி மற்றும் வேன் களில் காய்கறிகளை ஏற்றி ஒவ்வொரு தெரு /பகுதி க்கு ஒரு வேன் என அனுப்பி ஒரு வீட்டில் உள்ள வர்கள் வந்து வாங்கி சென்ற பிறகு மற்றவர் வந்து வாங்கி செல்ல வேண்டும். இது போன்ற முறையை பின்பற்றினால் நகர் முழுவதும் ஒரு இடத்தில் கூட்டம் சேர்வது தடுக்கப்படும். இது போண்று இயக்கப்படும் வாகனத்தில் மாநகராட்சி ஊழியர்களையும் அனுப்பி வைக்க வேண்டும். இதனால் வியாபாரிகள் தங்கள் இஷ்டம் போல விலை வைக்க இயலாது. இப்படி செய்தால் காய்கறிகள் அவரவர் வீட்டுக்கு சென்று சேரும். மக்கள் தேவையில்லாமல் கூட்டம் கூடுவது தவிர்க்கலாம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து நிலமையை சீர் செய்ய கேட்டுக்கொள்கிறேன். (வி. ஏ. ஓ ரிட்டயர்டு)

பாண்டியன்Mar 28, 2020 - 09:37:18 AM | Posted IP 108.1*****

தனியார் மார்க்கெட் சுகாதாரம் கிடையாது.கொரோனா பரவ சிறந்த இடம் அரசு தடை செய்யவேண்டும் .

SangeethaMar 28, 2020 - 08:28:18 AM | Posted IP 173.2*****

Kindly change vegetables market any in public place with more space for ever

மாரியப்பன்Mar 28, 2020 - 07:02:59 AM | Posted IP 108.1*****

தூத்துக்குடி தென்பாகத்தில் மையவாடி எதிரில் ஒரு உழவர் சந்தை அமைக்கலாம் அரசு . பரிசீலிக்க வேண்டும்

Navin rubanMar 27, 2020 - 08:39:02 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடி காமராஜ் தினசரி காய் கணி மார்கெட் தற்சமயம் மூடியது சரிையே இந்த மார்கெட்டிற்கு போதிய இட வசதி கிடையாது இதனால் கோரனா பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பொருளான காய்கறியை தூத்துக்குடி மக்களுக்கு தங்கு தடை இன்றி கிடைக்கும் வண்ணம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு தற்சமயம் செயல்படும் வகையில் காய் கனி மார்கெட் அங்கு மாத்தலாம் மேலும் காய் கணி விலை ஏற்றதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து அவர்கள் யூனிபார்ம் இல்லாமல் சிவில் உடையில் கடைகளில் விற்கும் விலையை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அதிக விலைக்கு விற்கும் கடைகளை சில் வைத்து கடை உரிமையாளருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் மருந்தகங்கள் மருத்துவமனைகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தாலோ செயல்பட்டால் மக்கள் அந்த குழுவிற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மொபைல் நம்பர் மாவட்ட மக்கள் அனைவருக்கும் தெரிய படுத்த வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் நடுத்தர மக்கள் எளை எளிய மக்களின் வாழ்வாாரத்தை உறுதிபடுத்த முடியும் இதை மாவட்ட நிர்வாகம் முடிந்த வரை வேகமாகச் செய்து முடிக்க வேண்டும்

பாலகிருஷ்ணன்Mar 27, 2020 - 02:42:37 PM | Posted IP 108.1*****

இப்படி அநியாய விலை வச்சு விற்பனை செய்யும் தறுதலைகளே இந்த பாவம் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் விடாது சொத்து மட்டும் அல்ல பாவத்தையும் சம்பாதித்து வைக்கிறீங்க

SaroMar 27, 2020 - 02:19:00 PM | Posted IP 108.1*****

Super

அண்ணாதுரைMar 26, 2020 - 02:07:30 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மார்க்ககெட்டில் ஒவ்வொரு கடையிலும் 4 அல்லது 5 வாளிகள் உள்ளது ஒவ்வொரு வாளியும் வித்தியாசமான எடை கொண்டவை அதன் மூலம் எடை குறைப்பு செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.அரசே காய்கனிகளுக்கு இந்த பேரிடர் காலத்தில் விலை நிர்ணயம் செய்யவேண்டும்.அம்மா பண்ணை பசுமை காய்கனி கடைகளில் விற்கும் விலைக்கு விற்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்

ராஜாMar 26, 2020 - 10:39:03 AM | Posted IP 162.1*****

ஜான்சன் சார் சொல்வது தான் நடக்கப் போகுது. ஓவர் எகாள்ளை .

குமார்Mar 26, 2020 - 10:22:54 AM | Posted IP 108.1*****

காய்கறி சந்தையை தனியாரின் கட்டுப்பாட்டில் விடாமல் அரசாங்கமே காய்கறி சந்தை நிர்வாகத்தை எடுத்து நடத்தவேண்டும்....

ஜாண்சன் சர்ச்சில்Mar 26, 2020 - 09:34:09 AM | Posted IP 108.1*****

மதிப்பிற்குரிய வியாபாரிகளுக்கு ஓர் வேண்டுகோள்....தனுஸ்கோடி நிலைமை மீண்டும் வராதவண்ணம் காத்துக்கொள்ளவும்...வெள்ளைக்காரன் சாப்பிட்டுவிட்டு போட்ட எச்சில் இலையை எடுத்து அதைக்கழுவி மீன்பிடிக்க கடலுக்கு சென்று உழைத்துவிட்டு பசியோடு வருபவர்களுக்கு அன்று பரிமாறிய உணவகங்கள் இருந்த தனுஸ்கோடி எப்படி அழிந்துபோனதென்று உலகறியும்.....கொரோனோ வைரஸால் உலகமே செய்வதரியாது திகைத்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டங்களில் இதுதான் சமயமென்று அத்தியாவசிய பொருட்களை அநியாயமாக விற்று சம்பாதிக்கவேண்டும் என எண்ணாதீர்கள் ஏழை எளிய மக்களை பாதிக்காதவண்ணம் நியாயமாக விற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்க வேண்டுகிறேன்.....இல்லையெனில் அன்று தனுஸ்கோடிக்கு ஏற்பட்ட நிலைமைதான் மீண்டும்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory