» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவு

வியாழன் 26, மார்ச் 2020 10:32:45 AM (IST)சுரண்டை பகுதியில் கொரோனா வைரஸ் தடுக்கும் பணியில் முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை தென்காசி கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுரண்டை மற்றும் வீரகேரளம்புதூர் தாலுகா பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், திறக்கப்பட்டிருக்கும் காய்கறி மார்க்கெட், மருந்தகங்கள், மளிகை கடை,, பாலகங்களிலும்  எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தென்காசி கோட்டாட்சியர் பழனிகுமார் ஆய்வு செய்தார். திறக்கப்பட்டுள்ள கடைகளின் முன்பாக தண்ணீர், தடுப்பு மருந்துகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளவா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம் அவசியமின்றி வெளியே வரக்கூடாது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், அதிகமான மக்கள் கூட கூடாது, சிறுவர்கள் விளையாட வெளியே வரக்கூடாது, என கூறினார். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவதுடன் மக்கள் கூடுவதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன், மண்டல துணை தாசில்தார் சிவன் பெருமாள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், முருகன் ஆகியோரும் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory