» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மார்க்கெட் கடைகளில் கூட்டம் கூட விடக் கூடாது : அதிகாரிகளுக்கு நெல்லை ஆட்சியர் உத்தரவு

வியாழன் 26, மார்ச் 2020 12:02:01 PM (IST)

நெல்லையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மார்க்கெட் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் கூட்டம் கூட விட கூடாது என நெல்லை ஆட்சியர், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், விஏஓ.,களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் வசதிக்காக நெல்லை மாநகரில் காய்கறி கடைகள், மார்க்கெட்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூட விட கூடாது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

அவ்வாறு அதிகமாக கூட்டம் கூடினால் சம்பந்தப்பட்ட கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடைகளில் அதிகமான மக்கள் கூடாமல் டோக்கன் முறையில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டே பொதுமக்கள் நிற்க வேண்டும். இந்த உத்தரவை முறையாக கடைபிடிக்காத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory