» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனா எதிரொலி : கிராமத்தில் மஞ்சள் நீர் தெளிப்பு

வியாழன் 26, மார்ச் 2020 3:10:21 PM (IST)தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை கிராமத்தில் வீதிகள் தோறும் மஞ்சள் நீரை வேப்பம் இலை மூலம் தெளித்து கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குத்துக்கல் வலசை கிராமத்தில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவ்வப்போது வந்து சாலைகளில் யாரும் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் லோடு ஆட்டோவில் மஞ்சள் நீர் மற்றும் கிருமிநாசினி கலந்த தண்ணீரை கேன்களில் வைத்திருந்து சாலைகள் தோறும் சென்று வேப்ப இலைகள்  கொண்டு தெளித்தனர். இதுபோன்று தினமும் அவர்கள் இப்பணியைச் செய்ய முயற்சி செய்துவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory