» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தடையை மீறி சென்றதாக 15 பேர் மீது வழக்கு

வியாழன் 26, மார்ச் 2020 3:40:25 PM (IST)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லை நகரில் தடையை மீறி சென்ற ஆட்டோ டிரைவர் உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.

இருந்த போதிலும் ஒரு சிலர் வாகனங்களில் சென்றபடி இருக்கின்றனர். அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை மீறி யாரேனும் ரோட்டில் வந்தால் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.நெல்லை நகரில் மட்டும் போலீஸ் கமி‌ஷனர் தீபக்டாமோர் உத்தரவின் பேரில் 34 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தேவை இல்லாமல் வாகனங்களில் வருபவர்களை எச்சரித்து வருகின்றனர்.

தடையை மீறி வாகனத்தில் வந்ததாக நெல்லை நகரில் நேற்று மட்டும் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் மணிப்புரத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற ஆட்டோ டிரைவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். அவர்மீது சந்திப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தச்சநல்லூரில் அதிக பொதுமக்கள் கூடும்வகையில் கடைகள் நடத்தியதாக 3 வியாபாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.இதேபோல் பாளையில் அளவுக்கு அதிகமானோர் கூடும் வகையில் கடையில் வியாபாரம் செய்ததாக கடையின் உரிமையாளர் மற்றும் பொருட்கள் வாங்க வந்த 5 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory