» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வந்த 1076 பேர்

வியாழன் 26, மார்ச் 2020 5:25:49 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள 1706 பேர் சுகாதார துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் குவைத், சவுதி அரேபியா, கத்தார், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.இவர்களில் பெரும்பான்மையோர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்துள்ளனர்.  கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள காலகட்டத்தில் அவர்கள் இங்கு வந்துள்ளதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில் 40 பேரும்,  கீழப்பாவூர் பகுதிகள் 80 பேரும் , கடையம் பகுதியில் 20 பேரும்,, தென்காசி பகுதியில் 165 பேரும், செங்கோட்டை பகுதி 146 பேரும், கடையநல்லூர் பகுதியில் 311 பேரும், வாசுதேவநல்லூர் பகுதியில் 141 பேரும்,  சங்கரன்கோவில் பகுதியில் 82 பேரும், சேர்ந்தமரம் பகுதியில் 38 பேரும் ஆக மொத்தம் 1076 பேர்  வெளிநாடுகளில் இருந்து வந்து உள்ளனர்.இவர்கள் திருவனந்தபுரம், கொச்சி , மதுரை, திருச்சி, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் ஏதாவது ஒரு விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கக்கூடாது என்பதற்காக இவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory