» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 29 பேருக்கு கொரோனா அறிகுறி : மேலப்பாளையம் முடக்கம்

புதன் 1, ஏப்ரல் 2020 12:00:57 PM (IST)

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 29 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து பாளை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து மேலப்பாளையம் பகுதி முழுவதும் முடக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்நோய்க்கு தினமும் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள் லாக்டவுன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தனித்திரு விழித்திரு என்று விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் போலீசார் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த தனியார் அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மேலப்பாளையம், களக்காடு மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் ஊருக்கு திரும்பிய நிலையில் கொரோனா ஏற்பட்டிருக்கலாம் என்று பீதி கிளம்பியது. இதையடுத்து மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 பேர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. 

இதேபோல் தென்காசியை சேர்ந்த 2 பேர், செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவர், டவுனை சேர்ந்த 5 பேர், பேட்டையை சேர்ந்த ஒருவர், களக்காடு பகுதியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதையடுத்து அவர்களும் பாளை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நெல்லையில் மொத்தம் 29 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலப்பாளையம் முடக்கம்

இந்நிலையில் மேலப்பாளையம் பகுதி முழுவதும் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு முக்கிய சாலைகள் முழுவதும் தடைகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து மறுக்கப்பட்டது. அங்கு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக திறக்கப்பட்ட காய்கறி கடைகள் ரவுண்டானா, பகுதி உழவர் சந்தை பகுதி, முஸ்லிம் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது. 17 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து காய்கறி கடைகள் அந்தந்த தெருக்களில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது.

மேலப்பாளையம் பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம் டாமோர் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் பெரியசாமி,திபு மற்றும் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி கமிஷனர் கண்ணன் தலைமையிலான சுகாதார பணியாளர்களும் முழுவீச்சில் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory