» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இரவு பணியாற்றும் போலீஸாருக்கு பாதாம் பால்,பிஸ்கட் : விஜய் மக்கள் இயக்கம் வழங்கல்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 10:49:25 AM (IST)

திருநெல்வேலி மாநகரில் உள்ள சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் இரவுப் பணி போலீஸாருக்கு விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் பாதாம் பால், பிஸ்கட் நேற்று இரவு வழங்கப்பட்டது.

கரோனா நோய் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி மாநகர எல்லைகளில் 7 சோதனைச் சாவடிகளும், மாநகருக்குள் 16 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைச் சாவடியில் இரவுப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு திருநெல்வேலி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் பால், பிஸ்கட், முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றது.

இந்நிகழ்வை, வண்ணாா்பேட்டையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியாற்றும் போலீஸாருக்கு திருநெல்வேலி மனித உரிமைகள் ஆணைய காவல் உதவி ஆணையா் சேகா் சேதுராஜ் பாதாம்பால், பிஸ்கட், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தாா்.இதில், திருநெல்வேலி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவா் சஜி, மாவட்ட கெளரவ தலைவா் பைசல் ரகுமான், இணையதள அணி தலைவா் ராஜா, செயலா்கள் அருண், பாலா, விக்கி உள்பட பலா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory