» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காய்கனி சந்தையில் கிருமிநாசினி தடுப்பு நுழைவாயில்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 11:45:52 AM (IST)

திருநெல்வேலி பொருள்காட்சித் திடல் காய்கனி சந்தைக்கு வந்தவா்கள் கிருமிநாசினி சுரங்கத்தைக் கடந்து சென்ற பின்பே காய்கனிகள் வாங்க அனுமதிக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பொருள்காட்சித் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கனி சந்தைக்கு வருவோருக்காக கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய துவாரம் வழியாக மழை போல் தூறலாய் விழும் கிருமிநாசினியைக் கடந்து மக்கள் உள்ளே செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சுரங்கம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. முன்னதாக, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் ஆய்வு செய்தாா். அதிகாரிகள் பாஸ்கரன், மாநகர நல அலுவலா் சத்தீஷ்குமாா் உள்ளிட்டோரும் ஆய்வில் பங்கேற்றனா். இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள், பாதசாரிகள் அனைவரும் கிருமிநாசினி சுரங்கம் வழியாக காய்கனிகளை வாங்கிச் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory