» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆவி பிடிப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் : பாளை டாக்டர் தகவல்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 11:55:48 AM (IST)

ஆவி பிடிப்பதால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தலாம் என பாளை டாக்டர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

பாளை பெருமாள்புரம் வி.ஜே மருத்துவமனை நிர்வாகி டாக்டர் வினோத் குமார் கூறியிருப்பதாவது; உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் முன் மாதிரியான பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். தேச நலன் கருதி மக்கள் வீட்டில் இருப்பது நலம். 

மருத்துவர் என்ற முறையில் நான் சொல்லிக்கொள்வது 3 லேயர் உள்ள மாஸ்க்கை அறிந்து கொள்ள வேண்டும். தும்மும்போது கண்டிப்பாக கைக்குட்டையை உபயோகப்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வரும்போது வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதேபோல் தனியாக டவல் வைத்து துடைக்க வேண்டும். காய்கறிகளை கழுவுவதற்காக சோப்பு வந்துள்ளது. 

அதனை வாங்கி காய்கறிகளை நன்றாக கழுவி பயன்படுத்துங்கள். இதனால் நமது குடும்பத்தையே நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ஆவி பிடிப்பதனால் வைரசை வெளியேற்றலாம். அதற்காக மருந்து கடைகளில் கிடைக்கும் ஸ்டீம் இன்ஹேலர், கார்வால் ப்ளஸ் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தலாம். ஸ்டீம் இன்ஹேலர் அதிக அளவில் பயன்தரும். 

இந்த மருந்துகள் கிடைக்காத பட்சத்தில் துளசி இலைகளை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடமும், பெரியவர்கள் 3 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள வைரஸ் வெளியேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. இவ்வாறு டாக்டர் வினோத் குமார் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory