» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 12:49:29 PM (IST)
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்திலும், மாவட்ட எஸ்பி.,அலுவலகத்திலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி ஆயுதப்படை காவலர்களை கொண்டு தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதில் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி.,  உத்தரவுபடி ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி, அறிவுறுத்தலின் பேரில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் காவல்துறையின் உடல் நலனை கருத்தில் காெண்டு  திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்திலும், மாவட்ட எஸ்பி.,அலுவலகத்திலும் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory