» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவிலில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் : அமைச்சர் துவக்கி வைப்பு

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 5:17:32 PM (IST)


சங்கரன்கோவிலில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி நேற்று 06.04.2020 தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து அமைச்சர் தெரிவித்ததாவது:-உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் இதை பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் வீட்டிலிருந்து சோப்பு போட்டு சுத்தமாக கை கால்களை கழுவி கொரோனா வைரஸ்லிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு அச்சக தலவைர் கண்ணன்(எ)ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory