» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டிலிருந்தபடியே பணம் பெற தபால்துறை ஏற்பாடு

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 5:48:01 PM (IST)

கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்கள் வீட்டிகுள்ளேயே முடங்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்தபடியே பணம் பெற தபால்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் தமிழக அரசு வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அஞ்சல் துறையானது புதிய ஏஇபிஎஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆதார் இணைக்கப்பட்ட எந்த வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சேவை கிராமம் மற்றும் நகர்ப்புற தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ளலாம். கிராமப்புற மக்களின் முதியோர் பென்ஷன், 100 நாள் வேலைக்கு செல்லும் பயனாளிகள் தொகை, சிலிண்டர் மானியம் மற்றும் மத்திய, மாநில அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் தொகையினை ஆதார் எண் அடிப்படையில் வாங்குவோர் இந்த ஏஇபிஎஸ் சேவையின் மூலமாக பயன்பெறலாம்.

இதன்படி நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்தவித சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் அஞ்சல் அலுவலகம் சென்று பணம் எடுக்க சிரமப்படுகின்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் 0462 2584090 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினால் தபால்காரர் மூலம் வீடு தேடி வந்து இந்த சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும். அதன்படி நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே எந்த ஒரு வங்கியிலும் தாங்கள் கணக்கில் வைத்துள்ள பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த சேவைக்கு அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை நெல்லை கோட்ட அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory