» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஏழைகளுக்கு காங்கிரஸார் உதவிகள் செய்ய வேண்டும் : பழனிநாடார் வேண்டுகோள்

புதன் 8, ஏப்ரல் 2020 10:24:30 AM (IST)கொரோனாவினால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு காங்கிரஸார் உதவிகள் செய்ய வேண்டும் என சுரண்டையில்  நலத்திட்ட உதவி வழங்கி மாவட்ட தலைவர் பழனிநாடார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவை தடுக்க  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பாதிக்கப்படும் ஆதரவற்றோர், முதியோர், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் 500 பேர்களுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி உதவிகளை வழங்கி துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பேச்சாளர் பால்த்துரை, நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், மாவட்ட துணைத்தலைவர்  சண்முகவேல், ஊடகபிரிவு சிங்கராஜ், நாட்டாமை ராமராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் பிஎம் செல்வன், மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் தினகரன், மாவட்ட பொதுச்செயலாளர் ஏஜிஎம் கணேசன், தெய்வேந்திரன், செல்வராஜ், சங்கர், சமுத்திரம், தர்மராஜ், செல்லப்பா, பிரபு, உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக தலைவர் அழகிரி ஆலோசனையின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அந்தந்த பகுதிகளில் தங்களால் இயன்ற அளவிற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையால்  பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory