» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்னை மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து பலி

புதன் 8, ஏப்ரல் 2020 11:17:45 AM (IST)

ஆழ்வார்குறிச்சி அருகே தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக ஏறிய பட்டதாரி வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பாலசுப்பிரமணியன் (24). பி.சி.ஏ பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாராம். கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாலசுப்ரமணியன் சென்னையிலிருந்து ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது சகோதரர் தனபால் மற்றும் உறவினர் கணேசனுடன் அவரது தோட்டத்திற்கு இளநீர் பறிப்பதற்காக சென்றுள்ளனர். 

அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் பாலசுப்ரமணியன் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழங்கியதில் மரத்திலிருந்து பலசுப்ரமணியன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் வழியிலேயே பாலசுப்பிரமணியன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory