» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தாசில்தார் ஆய்வு

புதன் 8, ஏப்ரல் 2020 5:33:23 PM (IST)

வீகே புதூர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் தாசில்தார் அதிரடி ஆய்வு நடத்தினார்

கொரோனா தடுப்பு பணியில் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். தனிமைப்படுத்தப்படும் காலம் முடிவடைந்த பின்னரும் அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் மேலும் தொடர்ந்து கண்காணிக்கவும் தணிக்கை செய்தும் வருகின்றனர்.

இதன்படி வீரகேரளம்புதூர் தாலுகா வீரகேரளம்புதூர் மற்றும் சுரண்டை குறு வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமை படுத்தப்பட்டிருந்த நபர்களின் வீட்டிற்கு வீகேபுதூர் தாசில்தார் ஹரிகரன்,  மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக நேரில் சென்று, அந்நபருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ நோய் தொற்று அறிகுறிகள் ஏதும் உள்ளதா என கேட்டறிந்து தணிக்கை செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள் மார்க்கெட் மளிகை கடை, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்க் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory