» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நியாயமான விலையில் கிடைக்கும் காய்கறிகள் : பொதுமக்கள் மகிழ்ச்சி

புதன் 8, ஏப்ரல் 2020 6:42:47 PM (IST)

சுரண்டை காய்கனி மார்க்கெட்டில் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரானா வைரசை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசு குறிப்பிட்ட காலை நேரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய காய்கறி மார்கெட்டாக விளங்கும் சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட் இயங்கி வருகிறது. சமூக விலகலுடன் கொரானா தடுப்பு விதிகளையும் சரியாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மார்க்கெட்டில் பல்லாரி ரூ 25,  சின்ன உள்ளி ரூ 65, தக்காளி ரூ 10,  பூசணிக்காய் ரூ 7,  கத்தரிக்காய் ரூ 25, மாங்காய் ரூ60,  வெண்டை ரூ 25, சீனியவரை ரூ 15,  கேரட் ரூ 25, பீட்ரூட் ரூ 10, முட்டை கோஸ் ரூ 20, பீன்ஸ் ரூ 70, அவரை ரூ 30, மல்லியிலை ரூ 15, கறிவேப்பிலை ரூ 10, முருங்கைக்காய் ரூ 15, சவ்சவ் ரூ 15, முள்ளங்கி ரூ 10, மிளகாய் ரூ 15 ஆகிய விலையில் சில்லறைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊரடங்கு நேரத்திலும் சில்லறை ‌‌‌விற்பனைக்கே சரியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது எனவும் கொரானா தடுப்பு சமூக விலகலை கடைபிடிப்பதாகவும் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சரியான விலையில் விற்பனை செய்யப்படுவதை பொதுமக்கள் பாராட்டினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory