» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல் : 3 பேர் பரிதாப பலி

செவ்வாய் 21, ஏப்ரல் 2020 11:05:56 AM (IST)


சுரண்டை அருகே  கழூநீர்குளத்தில் விவசாய வேலைக்கு ரோட்டில் நடந்து சென்றவர்கள் மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதி 3 பேர் பலியானார்கள்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கழூநீர்குளத்தை சேர்ந்தவர்கள்  முத்தையா மகன் மாடசாமி (59) மருதையா  மனைவி துரைச்சி (55) முத்துப்பாண்டி தேவர் மனைவி பொன்னம்மான் (60) ஆகியோர் இன்று காலை 7 .30 மணி அளவில் விவசாய பணிகளுக்காக வீகே புதூர் நோக்கி சாலை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்நனர். அப்போது அவர்கள் பின்னால் முக்கூடலிலிருந்து அகரகட்டு நோக்கி வேகமாக  சென்று கொண்டிருந்த கார் பலமாக மோதியது இதில் ரோட்டில் நடந்து சென்றவர்கள் 3 பேரூம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

காரை ஓட்டிவந்த அகரகட்டை சேர்ந்த அந்தோணி சவரிமுத்து மகன் ஜோன்ஸ் அந்தோணி என்பவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹீர் ஹீசைன், சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீஸார் விரைந்து சென்று பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவத்தையடுத்து திரளான மக்கள் கூடி கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory