» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊரடங்கால் எளிய முறையில் நடந்த திருமணம் : 10 பேர் மட்டுமே பங்கேற்பு

புதன் 29, ஏப்ரல் 2020 4:59:06 PM (IST)

தென்காசியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், தென்காசி வாய்க்கால் பாலம்  பகுதியை சேர்ந்தவர் ராம் சங்கர். இவர் சென்னையில் சிமெண்ட் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவருக்கு நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த பிரேமலதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இவர்களது திருமணம் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள திருவிலஞ்சிகுமாரர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு மிக எளிய முறையில், சமூக இடைவெளியை  பின்பற்றி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory