» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடத்தையில் சந்தேகத்தால் பெண் வெட்டிக்கொலை : கணவர் கைது தாழையூத்தில் பரபரப்பு

புதன் 6, மே 2020 12:12:28 PM (IST)

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே நடத்தை சந்தேகத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார், இதனையடுத்து அவரது கணவர் தாழையூத்து காவல்நிலையத்தில் சரண் அடைந்தார் . 

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சொரிமுத்து.(37) இவர் கேரளாவில்  வடை போட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த ரம்லத் (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம் . திருமணத்திற்கு பின். மனைவியை சொந்த ஊரான குறிச்சிகுளத்திற்கு தனது வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டார். சொரிமுத்து மட்டும் கேரளாவில் தங்கி தொழில் செய்து வந்தார் . 

விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால் கேரளாவில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் சொரிமுத்து கடந்த ஒரு மாதமாக சொந்த ஊரான குறிச்சிகுளத்தில் குடும்பத்தினருடன் உள்ளார் . இந்நிலையில்  உன் மனைவின் நடத்தை சரியில்லை என்று  அவரது நண்பர்கள் மற்றும் ஊரில் சிலர் அவரிடம் கூறினார்களாம். மேலும்  ஒருவருடன் தவறான உறவு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். 

இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இன்று அதிகாலை மனைவியை வெளியில் செல்ல வேண்டும் என கூறி சொரிமுத்து  மோட்டார் பைக்கில் ஊரில் இருந்து அழைத்து சென்று  தாழையூத்து அருகே நான்குவழிச்சாலை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாழையூத்து காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார் . 

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த ரம்லத் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory