» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவல் ஆய்வாளருக்கு சோழன் சேவை செம்மல் விருது

செவ்வாய் 19, மே 2020 5:27:14 PM (IST)


தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் செய்து வரும் காவல்துறை பணி மற்றும் சிறப்பான சமூக சேவையை பாராட்டி சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் சோழன் சேவை செம்மல் விருது மற்றும் சமூக சேவைக்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

தென்காசி காவல்நிலைய ஆய்வாளர் ஆடிவேல் தனது காவல்துறை பணியை சிறப்பாக செய்வதுடன். காவல்துறை உங்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும்  ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக பணிகளையும்  செய்து, காவல்துறை உயர்அதிகாரிகள் மட்டுமன்றி பொதுமக்களிடமும் நற்பெயர் பெற்றுள்ளார். மேலும் கொரோனா நிவாரணப் பணிகளிலும் இவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இதனை பாராட்டும் வகையில் சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட தலைவர் டாக்டர் காளித்துரை, தென்காசி  காவல் ஆய்வாளர் ஆடிவேல் ஆற்றிவரும்  சமூக சேவைகளை  பாராட்டி அவருக்கு சேவை செம்மல் விருது வழங்க தலைமைக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை முழுமையாக ஆராய்ந்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேலுக்கு சோழன் சேவை செம்மல் விருது மற்றும்  சமூக சேவை நற்சான்றிதழ், வழங்கி கவுரவ படுத்தி உள்ளது.

விருது பெற்ற காவல் ஆய்வாளர்  ஆடிவேலுவை சோழன் உலக சாதனை புத்தக  நிறுவனத் தலைவர் டாக்டர் நிமலன் நீலமேகம் ,பொது தலைவர் தர்மதுரை,  சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனத்தின் நைஜீரிய நாட்டின் தலைவர். பேராசிரியர் புகாரி ஈசா மற்றும் சோழன் உலக சாதனை புத்தகத்தின் பல்வேறு நாட்டு தலைவர்கள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட தலைவர் டாக்டர் உகாளித்துரை மற்றும் காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும்  பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory