» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா

வியாழன் 21, மே 2020 6:10:58 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கடையம் மேலதெருவைச் சேர்ந்த 48 வயது ஆண், ஆலங்குளம் ஓடைமரிச்சான் உடையாம்புளி பகுதியைச் சேர்ந்த 27 வயது ஆண்,அரியநாயகி புரத்தைச் சேர்ந்த 80 வயது பெண் , மேலும் இதே ஊரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 19 வயது மற்றும் 15 வயது சகோதரிகள், 13 வயது சகோதரன்,சேர்வைகாரன்பட்டி சேர்ந்த 65 வயது ஆண், பொய்கையை சேர்ந்த 55 வயது பெண் ஆகிய 8 பேர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இவர்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. அங்கு சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory