» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காய்கறி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு மானியத்தில் டிராக்டர் வழங்கல்

வியாழன் 21, மே 2020 7:48:41 PM (IST)

வாசுதேவநல்லூர் தோட்டக்கலை துறை சார்பில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் காய்கறி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5 லட்சம் மானியத்தில் டிராக்டர் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூர் காய்கறி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5 லட்சம் மானியத் தொகையுடன்  விவசாயிகளின் பங்குத் தொகையும் இணைந்து பண்ணை இயந்திரமான டிராக்டர் வழங்கப்பட்டது. வாசுதேவநல்லூர் வட்டார அட்மா குழுத் தலைவர் மூர்த்திப் பாண்டியன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்  பவித்ரா ஆகியோர் காய்கறி உழவர் உற்பத்தியாளர் குழுவின் தலைவர் போஸ் ராஜா மற்றும் குழு  உறுப்பினர்களிடம் டிராக்டரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முகம்மது உசேன், வாசுதேவநல்லூர் பேரூர் அதிமுக செயலாளர்  சீமான் மணிகண்டன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வைகுண்டசாமி, சண்முகவேல் ராஜன், அன்பரசன், குழு செயலாளர் சாகுல்கமீது, பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory