» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 22, மே 2020 10:12:19 AM (IST)தென்காசியில் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனிமனித இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி கொடுக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இழந்த ஆட்டோ  தொழிலாளர் குடும்பத்திற்கு தலா. ரூ.15,000 நிவாரணம்  வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரும்திரள் ஆட்டோ தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர்  அற்புத ஜெகன் தலைமை தாங்கினார்.  மாவட்ட துணை தலைவர்கள் விரபுத்திரன் சக்திவேல்   ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முருகன், சிஐடியு வட்டார தலைவர் லெனின்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி,சிஐடியு வட்டார செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் தாணுமூர்த்தி,கருப்பையா,  நாகலிங்கம், போக்குவரத்து இராஜேந்திரன்      மற்றும்  ஆட்டோ சங்க அனைத்து பகுதிகளில்இருந்து நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory