» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால சாரல் குளு குளு : சுரண்டையில் காலை முதலே சாரல்

வெள்ளி 22, மே 2020 11:01:48 AM (IST)

சுரண்டை பகுதியில் குளு குளு சாரல் மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் பெய்ய துவங்கிய பருவ மழைக்கு ஆரம்ப அறிகுறியாக கடந்த 6 நாட்களாக சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசியதால், தென்னை, வாழை, உள்ளிட்ட பல மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில் நேற்று காற்றின் வேகம் சற்று தணிந்த நிலையில் இன்று அதிகாலை முதல் ஜில்லென்ற லேசான குளிர்காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ந்துள்ள விவசாயிகள் சோளம், கத்தரி, தக்காளி, உள்ளி, பல்லாரி, மிளகாய், பீட்ரூட், போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ள நிலையில் கூடுதல் உற்சாகத்துடன் விவசாய பணிகளில் ஈடுபடுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory