» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் மயமாக்கல்: மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 22, மே 2020 12:02:26 PM (IST)பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்ற மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பீச் ரோட்டில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். எச்எம்எஸ் பொதுச் செயலாளர் துறைமுகம் சத்யா, சிஐடியூ சார்பில் துறைமுக சபை உறுப்பினர் ரசல், ஏஐடியூசி சார்பில் பாலசிங்கம், எல்பிஎப் சார்பில் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

சாமிமே 22, 2020 - 01:29:19 PM | Posted IP 108.1*****

ஆம், டாஸ்மாக் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை

குமார்மே 22, 2020 - 12:23:42 PM | Posted IP 108.1*****

தொற்று பரவல் சட்டம் அமலில் உள்ள இக்காலகட்டத்தில் ஐந்து நபர்களுக்கும் மேற்பட்ட நபர்கள் பொதுவெளியில் தகுந்த சமூக இடைவெளி இன்றி இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி உள்ளதா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory