» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்கள் என்ன தேச துரோகியா? ஸ்னோலின் தாயார் ஆவேசம்!

வெள்ளி 22, மே 2020 1:37:12 PM (IST)ஆதார் அட்டையை போலீஸ் ஸ்டேசனில் காட்டி கல்லறைக்கு போய் அஞ்சலி செலுத்த நாங்கள் என்ன தேச துரோகியா? என்று தமிழக அரசிற்கு ஸ்னோலின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தில் கல்லூரி மாணவி ஸ்னோலின் உட்பட 13பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவு நாளான இன்று மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மகளின் கல்லறையில் மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறும்போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே எங்கள் வீடு, கல்லறை தோட்டம் ஆகிய பகுதிகளை போலீசார் இரவு பகலாக கண்காணித்து வந்தனர். ஆதார் அட்டையை போலீஸ் ஸ்டேசனில் காட்டிவிட்டு கல்லறைக்கு போய் அஞ்சலி செலுத்த சொன்னார்கள். பெத்த மகளுக்கு அஞ்சலி செலுத்த ஆதார் அட்டையை போலீசார் கேக்குறாங்க. 

நாங்கள் என்ன தேச துரோகியா. துப்பாக்கி சூடு நடந்து 2 ஆண்டுகள் ஆகியும், அதற்கு காரணமான போலீசார் யார் மீதும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நடக்கும் ஒரு நபர் விசாரனை ஆணைய‌மும் மவுனமாக இருக்கிறது. என் மகளை சேர்த்து உயிரிழந்த அப்பாவி மக்களின் உயிருக்கு அரசாங்கம் என்ன சொல்லப்போகிறது என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.


மக்கள் கருத்து

M.sundaramமே 22, 2020 - 05:23:58 PM | Posted IP 108.1*****

Delayed justice is denied justice. We cannot expect justice will be delivered during the tenure of this government.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory