» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊரடங்கை மீறியதாக 6423 நபர்கள் மீது வழக்கு பதிவு

வெள்ளி 22, மே 2020 5:02:14 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் இதுவரை தேசிய ஊரடங்கை மீறியதாக 6423 நபர்கள்  மீது 4330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  காவல் துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இதுவரை  144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 6423 நபர்கள்  மீது 4330 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 4298 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory