» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாலியல் தொல்லையால் தீக்குளித்த சிறுமிக்கு மாதர் சங்கத்தினர் ஆறுதல்

வெள்ளி 22, மே 2020 5:02:24 PM (IST)தூத்துக்குடியில் பாலியல் தொல்லையால் தீக்குளித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு மாதர் சங்கத்தினர் ஆறுதல் தெரிவித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம். பகுதியில் காதலிப்பதாக ஏமாற்றி தான் கூப்பிடும் இடத்திற்கு வரச்சொல்லி மிரட்டியதால் பயந்து தற்கொலைக்கு முயன்ற 17 வயது சிறுமி மிகக்கடுமையான  தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர்கள் பூமயில் உள்ளிட்டோர் நேரடியாக சென்று பார்த்து வந்துள்ளனர். காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் இருந்து நேரில் சென்று பார்வையிட்டு, மருத்துவ செலவினங்களுக்கான உதவிகளை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. 

சிறுமியின் பெற்றோர்கள்  இருவரும் உப்பளத்தில் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். ஏழ்மையான குடும்பம். எனவே மாதர் சங்கத்தின் சார்பில் இன்று (22.05.2020) தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து எளிய பங்களிப்பாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், மாதர் சங்க மாவட்டச்செயலாளர் பூமயில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் மதுபால், முத்துக்குமாரசுவாமி, முருகன், சீனிவாசன், சிவராமகிருஷ்ணன் மற்றும் வாலிபர் சங்கம் புவிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

M.sundaramமே 22, 2020 - 05:25:26 PM | Posted IP 108.1*****

Well done. best wishes for your good service.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory