» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் போக்சோவில் கைது

வெள்ளி 22, மே 2020 5:15:16 PM (IST)

விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் ராஜாமணி என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார், அப்போது தன் குழந்தையை தேடி அங்கு சென்ற அச்சிறுமியின் தாயார் அதை பார்த்து விடவும் அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாக அமல்ராஜ் ராஜாமணி மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி  விசாரணை மேற்கொண்டு அமல்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory