» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முறைசாரா கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்

சனி 23, மே 2020 10:22:33 AM (IST)தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரிடம் முறைசாரா கட்டுமான தொழிலாளர்கள்  கோரிக்கை மனு கொடுத்து  சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம்  நடைபெற்றது .

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி,சிஐடியு நிர்வாகிகள் லெனின்குமார்,  கிருஷ்ணன், ஆரியமுல்லை, வன்னியபெருமாள்,  மாரியப்பன், குருசாமி , முருகேசன்,  கருப்பையா, ஜேக்டோ  தலைவர்  மாரியப்பன், மாதர்சங்கதலைவர்  சங்கரி,  அய்யம்பெருமாள், சிஐடியு தலைவர்கள் மணிகண்டன் , நாகரத்தினம், தம்பிதுரை , பேச்சிமுத்து,  ஆறுமுகம் , குத்தாலிங்கம்,மின்வாரியம் ராஜசேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தமிழக அரசு அறிவித்து 2 மாதம் ஆகியும் இதுவரை கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் அரிசி,பருப்பு எண்ணெய்  வழங்காமல் தொழிலாளர்களை அலைகழித்து ஏமாற்றி வருவதை கண்டித்தும், உடனே  நலவாரியத்தில் நலவாரிய அட்டை வாங்கிய அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கிட கோரியும், பென்சன் வாங்கும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக பென்சன் வழங்காமல் பட்டினி போடுவதை கைவிட்டு பென்சன்தாரர்களுக்கு வழங்காத பென்சனையும், கொரோனா நிவாரண நிதி,  நிவாரணபொருட்கள் வழங்கிட கோரியும்,

அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கி கணக்கு இருக்கும் போது யாருக்கும் பணம் அனுப்பாமல், தபால் கணக்கு தேவையில்லமால் கட்டாயபடுத்தி துவங்கிட தொழிலாளர்களை அலைக்கழிப்பதை நிறுத்திடவும், வங்கி கணக்கில் பணம் உடனாடியாக செலுத்திடவும், நலவாரிய அட்டைகள் புதுபித்தலுக்கு  விஏஓ கையெழுத்து கட்டாயம் மற்றும் தேவையில்லாத ஆவணங்கள் கேட்பதை நலவாரிய அதிகாரிகள் கைவிட்டு நலவாரிய அட்டை புதுபித்தலுக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையை தொடரவேண்டும். 

மத்திய அரசு கொரோனா காலத்தில் தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவதை கண்டிதும், 8 மணிநேர வேலையை 12 மணி நேரவேலையாக மாற்றிய சட்டத்தை வாபஸ் வாங்கிடவும், பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை தனியார்க்கு தாரைவார்த்து மின்சாரா கட்டணம் அதிகமாக வசூல் செய்வதற்கு மத்தியஅரசை கண்டித்தும், வாபஸ் வாங்கிட கோரியும், பெட்ரோல் டீசல்  விலையை குறைத்திட கோரியும், பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பதை கைவிடவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  சிஐடியு முறைசாரா கட்டுமான தொழிலாளர்கள் கோஷமிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory