» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மதுபோதையில் வாலிபரை வெட்டி படுகொலை : நண்பர்களுக்கு போலீசார் வலை

சனி 23, மே 2020 11:19:13 AM (IST)

மதுபோதையில் வாலிபரை வெட்டி படுகொலை செய்த நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கையை சேர்ந்தவர் பசும்பொன்.  இவரது மகன் பிரதீப் (27). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப் தனது பெற்றோருடன் தென்காசிக்கு வந்து வசித்து வந்தார்.இவர் கடந்த சில நாட்களாக தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள தோப்பில் தனது நண்பர்களுடன் சென்று மது குடிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.நேற்று வழக்கமாக தோப்பிற்கு பிரதீப் சென்று தனது நண்பர்களுடன் மது குடித்துள்ளார்.கறி விருந்து நடந்துள்ளது.

மதுபோதையில் பிரதீப்பிற்கும் அவரது நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் பிரதீப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்  .இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி., சுகுணா சிங், தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் , ஆய்க்குடி காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரதீப்பை கொலை செய்த அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory