» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை சந்திப்பில் பத்து கடைகளில் கொள்ளை

சனி 23, மே 2020 11:29:31 AM (IST)

திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல்நிலையம் அருகே உள்ள சாலையில் மின்மோட்டார், எலெக்ட்ரிக்கல் கடை மற்றும் மருந்து கடை உள்ளிட்ட 10 கடைகளில் நள்ளிரவு மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை சந்திப்பு பகுதியில் ஈரடுக்கு மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த பகுதியில் மின் மோட்டார் , இரும்புப்பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு தடையால் கடைகள் பல நாட்களாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம்தான் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரமும் களைகட்டி வந்தது. 

இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் வியாபாரம் முடிந்த அடைக்கப்பட்ட நிலையில் , ஈரடுக்கு மேம்பாலம் சந்திப்பு காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில்  உள்ள சந்திரதேவராஜ் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல், முகமது அலி என்பவரின் மின் மோட்டார், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட 10 கடைகளின் கதவின் பூட்டுக்களை உடைத்து பணம் , மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர் . 

காலையில் இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் . மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர் . இதுகுறித்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர் . மேலும் சுமார் 1 லட்சம் ரூபாய்க்குள் பணம் பொருட்கள் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. சந்திப்பு காவல்நிலையம் அருகில் உள்ள 10 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory