» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரூ. 75 லட்சத்தில் கண்மாய் மராமத்து பணிகள் துவக்கம் : அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு

சனி 23, மே 2020 12:24:35 PM (IST)தென்காசி மாவட்டம் சிவகிரி அருகில் உள்ள தென்மலை கண்மாய் ரூபாய் 75 லட்சம் செலவில் மராமத்து செய்யும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் துவக்கி வைத்தனர் .

தென்காசி மாவட்டம்,முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020-21-ம் நிதியாண்டில் பொதுப் பணித்துறையின் மூலம் சிவகிரி வட்டம் தென்மலை கிராமத்தில் உள்ள தென்மலை கண்மாய் ரூ.75 லட்சம் செலவில் புணரமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத் துறை அமைச்சர் ராஐலெட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன்,  புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், சிவகிரி தாசில்தார் கிருஷ்ண வேலு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா, துணைப் பொறியாளர் தினேஷ், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, வேலம்மாள்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வெங்கடேசன்,தென்மலை பெரியகுளம் விவசாய கமிட்டி தலைவர் காளிமுத்து, செயலாளர் பாபு ராஜா, துணைச்செயலாளர் முனியாண்டி, பொருளாளர் குருசாமி, துணைத்தலைவர்கள் கருத்தப்பாண்டி, வேலுச்சாமி  மற்றும் முத்தரசு பாண்டியன், வீரண தேவர்,அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவநல்லூர் மூர்த்தி பாண்டியன், சங்கரன்கோவில் ரமேஷ், பேரூர் செயலாளர்கள் வாசுதேவநல்லூர் சீமான் மணிகண்டன், சிவகிரி காசிராஜன், ராயகிரி சேவக் பாண்டியன்,அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சின்னத்துரை, முருகையா பாண்டியன், சசிகுமார்,கிராம நிர்வாக அலுவலர் அன்புசெல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory