» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் உடல் தகனம் : அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் அஞ்சலி

திங்கள் 25, மே 2020 7:30:56 PM (IST)


மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் வருவாய்துறை அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழகத்தின் மன்னராட்சி காலத்தில் முடி சூடிய ராஜாக்களில் ஒருவரும் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் மற்றும் 32 வது ராஜாவுமான  முருகதாஸ் தீர்த்தபதி  நேற்று  இரவு காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று சிங்கம்பட்டியில் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.டி.உதயகுமார்,  நெல்லை எம்பி. ஞானதிரவியம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.முருகையாபாண்டியன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்து அமைந்துள்ளது சிங்கம்பட்டி ஜமீன்.சிங்கம்பட்டியின் 31-வது ஜமீன் பட்டம் பெற்றவர் டி.என்.சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. இவர்தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு ஐந்து வயதில் முடி சூட்டப்பட்டது. இவருக்கு இப்போது வயது 89 .

1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன.இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில்  முருகதாஸ் தீர்த்தபதி ஜமீன் பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 77 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் தர்பாரில் எழுந்தருளி காட்சி அளித்துள்ளார். ேஜமீன்சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப் பெற்றுள்ளது. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி கடைசி காலத்தில் விவசாயமும் சில ஆண்டுகள் ஆயுள் காப்பீட்டு முகவராகவும் உள்ளார்.

அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் தற்போதும் இடம் பெற்றுள்ளன. கடந்த சில தினங்களாக உடல் நல குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று இரவு 8-30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் அரண்மனையில் உள்ள ராஜதர்பார் மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கபட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து இன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜமீன்தார் உடல் ஊர்வலமாக எடுத்து வரபட்டு தாமிரபரணி நதிகரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இறுதி நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.டி. உதயகுமார், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையாபாண்டியன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ,முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன்,  தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் இராசேந்திரன், முன்னாள் எம்பி ராமசுப்பு,  முன்னாள் எம்எல்ஏ வேல்துரை அம்பாசமுத்திரம் தாசில்தார் கந்தப்பன்,உள்பட  ஏராளமான அதிகாரிகள் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து  கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory