» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி நினைவு தினம் : பல்வேறு கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிப்பு

செவ்வாய் 26, மே 2020 11:55:37 AM (IST)தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக முப்பது ஆண்டு காலம் தொடர்ந்து பணியாற்றியவரும், தூத்துக்குடி நகராட்சி தலைவராகவும், 2 முறை தூத்துக்குடி எம்எல்ஏ.வாக இருந்த என். பெரியசாமியின் 3ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு காலை தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரியசாமியின் மனைவி எபனேசர், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பிஜெகன், மற்றும் பெரியசாமியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில கலைஇலைக்கிய அணிசெயலாளர் வக்கீல் அந்தோணிபிச்சை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைதலைவர் கண்டிவேல், மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட பிரதிநிதிகள் வின்சென்ட்,பழனிவேல், பெரியசாமி,மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் சதாசிவம், மாநகர செயலாளர் உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Kannanமே 28, 2020 - 06:56:23 PM | Posted IP 162.1*****

Any other job vacancy

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory