» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள் : சோகத்தில் உறவினர்கள்.

செவ்வாய் 26, மே 2020 12:21:04 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் நண்பர்கள் உயிரிழந்தனர். இறப்பிலும் இணைபிரியாத நண்பர்களால் அவர்களது உறவினர்கள் சோகத்தில்  உள்ளனர்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு சத்யா நகர் மேம்பாலம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே பைக்கில் சென்ற மனோ (20),  சரத்குமார் (20). கொம்பையா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் கொம்பையா, சரத்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மனாே தீவிர சிகிச்சையில் உள்ளார். இறந்த வாலிபர்கள் அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள் என்றும்  இணைபிரியாத நண்பர்கள், எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வருவர். இதனால் அவர்கள் இறந்ததை கேள்விபட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் சுமார் 300க்கும் அதிகமானோர் கூடியதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

பள்ளி கல்லுாரிகளில் தங்கள் உடன் படிக்கும் மாணவர் அதிக சிசி திறன் கொண்ட பைக்குகளை வைத்திருப்பதை பார்ப்பதாலும், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும் வாலிபர்கள் கேட்பதால் அவர்களது பெற்றோர்களும் இவ்வகை பைக்குளை வாங்கி கொடுத்து விடுகின்றனர். அதில் வாலிபர்கள் நெடுஞ்சாலைகளிலும், ஊருக்குள்ளும் செல்லும் போது மிக அதிக வேகத்தில் செல்கின்றனர். மேலும் சிலர் பைக் ரேசிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கும் சாலையில் செல்லும் பிறருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர்பலியும் ஏற்படுகிறது. இதனால் பெற்றோர் அதிக வேகத்தில் செல்லும் பைக்குகளை தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. 


மக்கள் கருத்து

vadivelமே 27, 2020 - 03:38:08 PM | Posted IP 162.1*****

athiga cc konda bike thadai pannalaame.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory