» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி

செவ்வாய் 26, மே 2020 1:20:43 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் சுகாதாயத்துறை, வருவாய் துறை காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் நேற்றுவரை 85 பேர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 53பேர்கள்  பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

புளியங்குடி பகுதியில் மட்டும் சுமார் 48 பேர்கள் கொரோனா வைரஸ் தொற்றுவினால் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 35 பேர்களும் வெளிமாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் ஆவார்கள். 

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயமான் குறிச்சி பகுதியைச் சேர்ந்த 53 வயது உடைய ஆண் ஒருவருக்கும் மாயமான்குறிச்சி  அருகே உள்ள நாரணாபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் அவர்கள் இருவரும் தென்காசி யூஎஸ்பி பள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர்கள் இருவரும் இன்று காலையில்  தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  கொரோனா சிறப்பு  சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்து உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory