» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மீன்பிடி தடைக்காலம் 41 நாட்களாக குறைப்பு: மத்திய அரசு உத்தரவு!!

செவ்வாய் 26, மே 2020 3:29:27 PM (IST)

இந்தியாவில் மீன்பிடி தடைக்காலம் 41 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதனை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் மீன்பிடி தடைக்கான கால அளவை குறைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஊரடங்கு உத்தரவால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.  இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  

இதுவரை 61 நாட்கள் என இருந்த மீன்பிடி தடைக்காலம் 41 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை இருந்த தடைக்காலம் ஏப்ரல் 15ம்தேதி முதல் மே 31ம்தேதி வரை என குறைக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவின் மேற்கு கடற்கரையில் ஜூன் 1ம்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை இருந்த தடைக்காலம் ஜூன் 15ம்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை என குறைக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

vadivelமே 27, 2020 - 03:36:37 PM | Posted IP 162.1*****

appaavi, avarkale, diesel summa kuduthaal naanga summma tharuvom.

அப்பாவிமே 27, 2020 - 12:19:08 PM | Posted IP 108.1*****

சில மீனவர்கள் எல்லாம் சுத்தமான மீன்கள் எல்லாம் கார்பொரேட் கம்பனிகளுக்கு விற்று லாபம் பார்க்கின்றனர், ஆனால் மக்களுக்கோ அழுகிப்போன/ பதப்டுடுத்தி கெட்டுப்போன மீன்கள் அதிக விலையில் தான் கிடைக்கிறது ... இன்று கார்பொரேட் கம்பெனிகளுக்காக மீனவர்கள் மாறிவிட்டனர் , கடல்ல இருக்கும் மீன்கள் எல்லாம் அவர்கள் வளர்த்த / உருவாக்கிய மீன்கள் அல்ல.. எனவே மக்களுக்காக குறைந்த விலையில் கிடைக்க செய்யுங்கள் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory