» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக்குடன் கிணற்றில் விழுந்த வங்கி ஊழியர் படுகாயம்

செவ்வாய் 26, மே 2020 4:56:35 PM (IST)

சிவகிரி அருகே பைக்குடன் கிணற்றுக்குள் விழுந்த வங்கி ஊழியர் படுகாயம் அடைந்தார்.

பழனி சொக்க நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் தளவாணி முத்து மகன் சிவகுமார் (27). இவர் தென்காசி சிட்டி யூனியன் வங்கி யில் பணியாற்றி வருகிறார்.வங்கி மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து தனது பைக்கில் சொந்த ஊரிலிருந்து தென்காசிக்கு வந்துகொண்டிருந்தார்.

சிவகிரி வெற்றிலை மண்டகப்படி அருகே பைக் வந்தபோது திடீரென சாலையோரத்தில் உள்ள கிணற்றிற்குள் சிவகுமார் பைக்குடன் விழுந்துவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சிவகுமார் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டு இருந்தார்.இதுகுறித்து தகவல் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மாடசாமி ராஜா தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவகுமாரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory