» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மத்தியஅரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 26, மே 2020 5:41:31 PM (IST)


விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்து சுரண்டையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனிநாடார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ள மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக அறிவுறுத்தியதின் பேரில் தென்காசி மாவட்டம் முழுமைக்கும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சமூக விலகலுடன் 4 நபர்கள் மட்டும் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.சுரண்டையில் அண்ணா சிலை, சார் பதிவாளர் அலுவலகம், பொட்டல் மாடசாமி கோவில் திடல், மற்றும் காமராஜர் வணிக வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் முன்னிலை வகித்தார், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில பொதுச்செயலாளர் சிங்கராஜ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் பால்துரை, மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் விஏ சமுத்திரம், நகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் சமுத்திரம், வட்டார காங்கிரஸ் செயலாளர் தேவேந்திரன், நகர செயலாளர் செல்வம் , 17 வார்டு செயலாளர் காந்தி நகர காங்கிரஸ் செயலாளர் மோகன், முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்ட முடிவில் நகர இலக்கிய அணி அணி தலைவர் கந்தையா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பழனிநாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்தனர். தொடர்ந்து கடையாலுருட்டியில் மேலநீலீதநல்லூர் வட்டார தலைவர் முருகையா தலைமையிலும் சாம்பவர்வடகரையில் செங்கோட்டை கிழக்கு வட்டார தலைவர் ரத்தினம் மற்றும் நகர தலைவர் முருகன் தலைமையிலும்,. வீராணத்தில் ஆலங்குளம் வடக்கு வட்டார தலைவர் முஸ்தபா தலைமையில் முருகையா, மரியதாஸ், சங்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory