» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் நிவாரண உதவி கோரி ஆர்ப்பாட்டம் : பந்தல் தொழிலாளர்கள் கைது

செவ்வாய் 26, மே 2020 6:03:05 PM (IST)


தென்காசியில்  நிவாரண உதவித் தொகை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பந்தல் தொழிலாளர்கள் 54 பேர்கள் கைது செய்யப்பட்டனர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு பந்தல் டெக்கரேசன் சாமியான பந்தல் தொழிலாளர்கள் வாழ்வுரிமைகாகவும் கொரோனா நிவராண நிதி மாதம்ரூ10000 வழங்கிட கோரி  மனு கொடுக்கும் போராட்டம் சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.ஆனால் மனு கொடுக்க காவல் துறை அனுமதி மறுத்த காரணத்தால் ஆர்பாட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் சிஐடியு  வட்டாரதலைவர் லெனின்குமார், வட்டார செயலாளர் கிருஷ்ணன்,  சிஐடியு  நிர்வாகிகள்  கருப்பையா, தாணுமூர்த்தி, பந்தல் சங்க நிர்வாகிகள்  கோவிந்தராஜ்,உச்சிமாகாளி,    கந்தசாமி, தங்கராஜ்,  ராஜா மற்றும் பந்தல் டெக்கரேசன் சாமியான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
 
பந்தல், டெக்கரேசன், சாமியான பந்தல் தொழில் பெரும்பாலும் திருவிழா மற்றும் முக்கிய சுபமுகூர்த்த  நாள்களில் மட்டும் தான் வேலை நடைபெறும். மத்திய, மாநில அரசுகள் 144 தடை கொரோனா பாதிப்பினால் எவ்வித விழாக்களும் நடத்த  அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள்  வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.  200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டினியால் வாடும் அவலநிலையை போக்கிடவும்,

கொரோனா நிவாரண நிதி  மாதம் ரூ.10,000 வழங்கிடவும்,  தொழில் செய்திட பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல அனுமதி வழங்கிடவும்,  திருவிழாக்கள் மற்றும் இல்ல விழாக்களுக்கு  உள்ள தடையை விலக்கி தொழில் செய்திட அனுமதி அளித்திடவும், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த, செய்யாத அனைத்து தொழிலாளர்களுக்கும்  கொரோனா நிதி மாதம் ரூ10000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 நபர்களை போலீசார் கைது செய்தனர் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory