» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டிய இருவர் கைது

புதன் 27, மே 2020 10:35:09 AM (IST)

சுரண்டை அருகே புகாரை திரும்பப் பெற கூறி அரிவாளால் மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருங்காவனம் பகுதியில் கோவில் நிர்வாக பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முத்துராமலிங்கம் என்பவர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது, இவ் வழக்கை திரும்ப பெறக்கோரி விஜய் மற்றும் சுரேஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்த முத்துராமலிங்கம் என்பவரிடம் பல முறை பேசியும் அவர் வழக்கை வாபஸ் பெற மறுத்துவிட்டார்‌ இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அரிவாளால் மிரட்டியுள்ளனர்.இது குறித்து முத்துராமலிங்கம் கொடுத்த புகாரின் பெயரில் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் விசாரணை மேற்கொண்டு மேற்படி இரண்டு நபர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory