» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கரோனா பரிசோதனை வாகனம் அறிமுகம்

புதன் 27, மே 2020 11:52:19 AM (IST)

நெல்லை மாநகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் தங்கி வேலை செய்து வரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள்.அந்த வகையில் டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வரும் நெல்லையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது ஊர் திரும்பி வருகின்றனர். 

இந் நிலையில் நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய நெல்லை மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வாகனத்தில் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கொரோனா வாகனம் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதை நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory